Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தை: கூட்ட நெரிசலால் தொற்று பரவும் அபாயம்

மே 25, 2021 06:07

திருப்பூர்:  திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்த வியாபாரிகள் டோக்கன்களை இடைத்தரகர்கள் மூலம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு வருகிற 31-ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவித்துள்ளது, அதன்படி திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் ஒருவாரத்திற்கு மூடப்பட்டுள்ளன். மருத்துவ சிகிச்சை பெறுவோர் தவிர தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மளிகை, காய்கறி உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பால், குடிநீர் சப்ளை, மருந்தகங்கள் நாட்டு மருந்து கடைகள் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.  திருப்பூர் மாநகராட்சியில் 90 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இந்த வாகனங்கள் தொற்று பரவல் கட்டுப்பாடுகளை பின்பற்றி காய்கறி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம்  அனுமதிக்கப் பட்டுள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில், இந்த காய்கறிவிற்பனை வாகனங்கள் புறப்பட்ட போது அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் 300 -க்கும் மேற்பட்ட  விவசாயிகள், வியாபாரிகள் ஒரே இடத்தில் குவிந்தனர். முந்திச் செல்ல முயன்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து அறிவுரை வழங்கினர், ஒரு சில டோக்கன்களை மட்டும் வழங்கிவிட்டு மற்ற டோக்கன்களை வியாபாரிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் வினியோகிக்கப்படுவதால் தகராறு ஏற்பட்டு  அங்கு தள்ளுமுள்ளு காணப்பட்டது.  

கூட்ட நெரிசல் காரணமாக தோற்று தொற்று பரவல் ஏற்படும் அபாயம் காணப்பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தலைப்புச்செய்திகள்