Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய பணி நியமன ஆணை

மே 25, 2021 07:43

 தஞ்சாவூர்: கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை 
சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர்  வழங்கினார்கள்.

கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பணி நியமன ஆணையினை திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் தனியார் தொண்டு நிறுவனங்களான ஆனந்தம் சில்க்ஸ், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கம், ரெட் கிராஸ், பார்மசி அசோசியேசன் அனைவரும் சேர்ந்து 50ம், மத்திய அரசாங்கத்தின் மூலம் 100ம், சிட்டி யூனியன் வங்கி மூலம் 100 என மொத்தம் 250 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது என எம்எல்ஏ துரை சந்திரசேகரன் தெரிவித்தார். 

தொடர்ந்து ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 35 எண்ணிக்கைகள் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியினை 25 லட்சம் மதிப்பீட்டில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே .ஜி.நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு வழங்கினார், இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை பழனி, தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர்.விஜய கௌரி, , மருத்துவமனை கண்காணிப்பாளர் முனைவர் மருதுதுரை, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்