Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 1,015 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 350 ஆக உயர்ந்தது

மே 26, 2021 10:16

விருதுநகர்: மாவட்டத்தில் புதிதாக 1,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கையும் 350 ஆக உயர்ந்தது. விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 1,015 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 32,828 ஆக உயர்ந்துள்ளது. 26,184 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 6,315 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று 10 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,046 படுக்கைகள் உள்ள நிலையில் 950 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 96 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,429 படுக்கைகள் உள்ள நிலையில் 801 படுக்கைகளில் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 628 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

விருதுநகர் செவல்பட்டி, மாத்திநாயக்கன்பட்டி, ஆர்.ஆர். நகர், காந்திபுரம்தெரு, சூலக்கரை, வடமலைக்குறிச்சி, ஜி.என்.பட்டி, செங்குன்றாபுரம், பாவாலி, ஒண்டிப்புலி, இந்திரா நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், என்.ஜி.ஓ. காலனி, கட்டயாபுரம், மீசலூர், லட்சுமி நகர், அல்லம்பட்டி, அண்ணாமலை தெரு, டி.டி. ரோடு, ராஜேஷ் காலனி, கே.உசிலம்பட்டி, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணறு, முஸ்டக்குறிச்சி, செங்குளம், திருச்சுழி, ராமானுஜபுரம், பாலையம்பட்டி, திருத்தங்கல், மத்தியசேனை, பந்தல்குடி, சாத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், பாலையம்பட்டி, நரிக்குடி, எம்.ரெட்டியபட்டி, வெம்பக்கோட்டை, சிவகாசி, சாட்சியாபுரம், விஸ்வநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றும் மாநிலப்பட்டியலில் 1,015 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட பட்டியலில் 474 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் நோய் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்