Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் இதுவரை 20 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது

மே 26, 2021 10:40

புதுடெல்லி: இந்தியாவில் ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. நேற்று வரையில், நாட்டில் 20 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 991 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 97 லட்சத்து 79 ஆயிரத்து 304 சுகாதார பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 67 லட்சத்து 18 ஆயிரத்து 723 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 50 லட்சத்து 79 ஆயிரத்து 964 பேர் முதல் டோசும், 83 லட்சத்து 55 ஆயிரத்து 982 பேர் 2-வது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர். 18-44 வயது பிரிவினர் 1 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

45-60 வயது பிரிவினர் 6 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 484 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 99 லட்சத்து 15 ஆயிரத்து 278 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 69 லட்சத்து 15 ஆயிரத்து 863 பேர் முதல் டோசும், 1 கோடியே 83 லட்சத்து 13 ஆயிரத்து 642 பேர் இரண்டாவது டோசும் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்