Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கறுப்புகொடி ஏற்றி போராட்டம்

மே 27, 2021 07:54

திருவாரூர்: மத்திய அரசின் மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராட்டம் தொடங்கி ஆறு மாதம் நிறைவு பெறும் நாள் மற்றும் பா.ஜ.க அரசின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 7 ஆண்டுகள் முடியும் நாளான மே 26 - அன்று துக்க நாளாக அனுசரிக்கும் விதத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து கறுப்புகொடி ஏற்றி போராட்டம் நடத்திட வேண்டுகோள் விடுத்தது. 

அதன் அடிப்படையில் மன்னார்குடி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சியில் உள்ள ராமபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் தலைமையில் கருப்புக் கொடி ஏற்றி மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பின்னர் கலைந்து சென்றனர். 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் எஸ்.லோகநாதன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வி.சிவானந்தம், எஸ்.ரெத்தினவேல், ஏ.ஐ.டி.யூ.சி செயலாளர் பி.ராஜ்மோகன், கிராம நிர்வாகிகள் வி.ரவிச்சந்திரன், சி.சந்திரசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்