Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடுவீடாக சென்று கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

மே 27, 2021 08:05

திருவாரூர்: வீடுவீடாக சென்று கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னிலத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ சிகிச்சை மையத்தை தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மருத்துவர்களிடம்  கொரோனோ நோயாளி பற்றியும் ஆக்சிஜன் நிலை பற்றியும் கேட்டரிந்தார். மருத்துவர் செவிலியர் பற்றாக்குறையை நீக்கும் வகையில், மருத்துவர்கள் பணி அமர்த்த விடுவார்கள் என உறுதியளித்தா.

மேலும், செய்தியாளர்களிடம் கூறும்போது, திருவாரூர் மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசி இருக்கிறது. நன்னிலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைத்து தொடக்க நிலையில் காய்ச்சல் இருமல் போன்ற கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. மேலும் வீடு வீடாக சென்று கொரோனோ பாதித்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
    
இந்த நிகழ்வில் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா, மாவட்ட மருத்துவ அலுவலர் உமாசந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்