Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 70 ஏக்கர் ஏலக்கி வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தது

மே 27, 2021 08:18

கடலூர்: பண்ருட்டி அருகே திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 70 ஏக்கர் மருத்துவ குணம் கொண்ட ஏலக்கி வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு  மற்றும் சாத்திப்பட்டு கிராமத்தில் பல ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை பயிரிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால் வாழை மரங்கள் வாழை குலைகலுடன் வேருடன் முறிந்து  சாய்ந்து சேதமடைந்தது.  

இதில் குறிப்பாக 70 ஏக்கர் மருத்துவ குணம் கொண்ட கற்பூர வள்ளி மற்றும் ஏலக்கி வாழை மரங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிரிட்டதாகவும், அதை அறுவடை செய்தால் அதிக அளவில் லாபம் தரும் எனவும், எதிர்பாராத விதமாக திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் எலக்கி மற்றும் கற்பூர வாழை மரங்கள் வேருடன் முறிந்து சாய்ந்தது. அதனால், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழை இலைகள் என அனைத்தும் சேதம் அடைந்ததால் அதனை விற்பனைக்கு பயன் படுத்த முடியாமல் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும் வேளாண் அதிகாரிகள் இதுகுறித்து இதுவரை யாரும் ஆய்விற்கு வராமல் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் விவசாயம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், தற்போதும் பெய்த சூறாவளி மழையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்,

எனவே அரசு உரிய இழப்பீடு வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்