Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்

மே 27, 2021 09:03

நாகை: நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கொரோனா சிகிச்சை
மையத்தை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் நாகை மாவட்டத்தில் 6  
.கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கேற்ப  சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். மிக விரைவில் ஒவ்வொரு
கிராமத்திலும் வார்டுகள் தோறும் வீட்டிற்கே சென்று  மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். நாகை மாவட்டத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 

நாகை மாவட்டத்தில் மிக விரைவில் தடுப்பூசிகள் போடாத நபர்களே இல்லாதவாறு நாகைமாவட்டம் மாற்றப்படும் என்று கூறினார் .வட்டார மருத்துவ
அலுவலர் சுந்தரராஜன் ,நாகை மாவட்ட திமுகபொறுப்பாளர்  கௌதமன் ஆகியோர் உடன் இருந்தனர். 
 

தலைப்புச்செய்திகள்