Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி குவெஸ்ட் சர்வதேச தனியார் பள்ளியில் கொரோனா தொற்று ஆரம்பநிலை புறநோயாளிகளுக்கான ஆயுஷ் சிகிச்சை மையம் 

மே 30, 2021 06:43

திருப்பூர்:  மாவட்ட  சேவாபாரதி அமைப்பின் சார்பில் அப்பாச்சி நகர் பகுதியிலுள்ள தி குவெஸ்ட் சர்வதேச தனியார் பள்ளியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஆரம்பநிலை புறநோயாளிகளுக்கான ஆயுஷ் சிகிச்சை மையம் (AYUSH CLINIC) தொடங்கப்பட்டுள்ளது.
இதில் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, வர்மா & நேச்சுரோபதி மருத்துவர்களைக் கொண்டு ஆயுஷ் சிகிச்சை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள பல்வேறு மருத்துவ மூலிகைகள் கலந்த ஆயுஸ் 64 என்ற மருந்து விநியோகிக்கப்பட்டது. இதில் விசுவ ஹிந்து பரிஷத் மாநில மக்கள் தொடர்பாளர் ரஜினிகாந்த்,சேவாபாரதியின்மாவட்ட தலைவர் விஜயகுமார், திருப்பூர் கோட்ட அமைப்புச் செயலாளர் ராமகிருஷ்ணன்,ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்லடம் நகர & ஒன்றிய தலைவர் செந்தில்,  மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்குமார் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் வேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆயுஷ் 64 மருந்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஆயுர்வேத ஆராய்ச்சிக்கான உயரிய அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழு, ஆயுஷ் 64 என்ற மூலிகை கலவைகளாலான மருந்தை உருவாக்கியுள்ளது. சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்த கலவை மிகச் சிறந்த நிவாரணியாகும்.
இந்தியா முழுவதும் ஆறு மருத்துவ ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆயுஷ் 64 மருந்து மிகச்சிறந்த பலனை வழங்குகிறது.

கொரோனா தொற்றின் அனைத்து நிலைகளிலும், நோயாளிகள் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். காய்ச்சல் அசதி உடல்வலி மூக்கடைப்பு தலைவலி இருமல் காய்ச்சல், அசதி, உடல் வலி, மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற லேசானது முதல் மிதமான கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களும், அறிகுறியற்ற நோயாளிகளும் இந்த மருந்தை, தொற்று உறுதி செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்கள், ஆயுஷ் 64 மருந்தை பயன்படுத்துவதுடன், தாங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். என்றும் கர்ப்பிணி பெண்கள் , பாலூட்டும் தாய்மார்கள் இந்த மருந்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

முன்னதாகதிருப்பூர் RSS சேவாபாரதியின் சார்பில் ஆயுஷ் 64 மருந்தை இலவசமாக வழங்கும் துவக்க நிகழ்ச்சி வாலிபாளையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்