Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் புதிய கொரோனா சிகிச்சை மைய சிறப்பு பகுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மே 30, 2021 06:49

திருப்பூர்: திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் கொரோனா பெரும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் இந்த மாவட்டங்களில் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து திருப்பூரில் 110 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து முதல்வர் பார்வையிட்டார்.

மேலும் அவசர உதவிக்காக புதிய வகை ஆம்புலன்ஸ் ஆக்சிசன் வசதி கூடிய கார் ஒன்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம்  நோய்த்தொற்று விவரங்களை கேட்டறிந்தார். இவ்விழாவின் போது சிகிச்சை மையத்திற்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வரும் எக்ஸ்போர்ட் அசோசியேசன் தலைவர் சக்திவேல், கிளாசிக் போலோ சிவராமன், சாய ஆலை உரிமையாளர் சங்கம் கலந்து கொண்டு சிகிச்சை சிறப்பு மையத்தினை பற்றி விளக்கமளித்தனர்.

மேலும் இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாவட்ட காவல் ஆணையாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், கொரோனா தொற்று சிறப்பு அதிகாரி சமயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்