Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் வழங்கினார்

ஜுன் 01, 2021 11:27

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன் களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா.காமராஜ் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: 

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மூன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை 3 நாட்களுக்கு தடுப்பூசி போட முடியாத சூழ்நிலை உள்ளதால் தடுப்பூசி உடனடியாக கேட்டுப் பெற்று மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதுபோல பிசிஆர் டெஸ்ட் அதிகப்படுத்த வேண்டும். கொரோனா என்று உறுதி செய்த பிறகு அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பகூடாது. மருத்துவமனை அல்லது விடுதிகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து குணமடைந்த பிறகு வீட்டிற்கு அனுப்ப வேண்டும்  ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கான அறிவிப்பை முன்கூட்டியே தமிழக முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவித்தால்தான் விவசாயிகள் அதற்கு தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வார்கள். குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். 

தலைப்புச்செய்திகள்