Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தாங்களாகவே தகரத்தால் தடுப்புகளை அமைத்து பாதுகாக்கும் இளைஞர்கள்

ஜுன் 01, 2021 11:39

மயிலாடுதுறை, ஜூன்.3: மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தாங்களாகவே தகரத்தால் தடுப்புகளை அமைத்து பாதுகாக்கிறார்கள் இளைஞர்கள். சொந்த செலவில் மருந்து தெளிப்பான் வாங்கி சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி 5-வது வார்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வெளிநபர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு அப்பகுதி இளைஞர்கள் தகரத்தால் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், நீலப்புலிகள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கபிலன் என்பவர் தனது சொந்த செலவில் மருந்து தெளிக்கும் கருவியை வாங்கி வார்டுக்கு உட்பட்ட
பகுதிகளில் தினசரி மருந்து தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், வார்டுக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கி வருகின்றனர்.

இப்பகுதி இளைஞர்கள். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் முடங்கிவிடாமல், தங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுவரும் இந்த இளைஞர்களுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்