Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தன்னார்வல அமைப்புகளால் சலுகை கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை மையம் துவக்கம்: எம்எல்ஏ. செல்வராஜ் துவக்கி வைத்தார் 

ஜுன் 01, 2021 11:42

திருப்பூர், ஜூன்.3: திருப்ப்பூரில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சலுகை கட்டணத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை மையம் தன்னார்வல அமைப்புகளால் துவங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பின்னலாடை தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக இச்சேவை துவங்கப்பட்டுள்ளது.. தமிழ்ப் பண்பாட்டு மையம் திருப்பூர் மற்றும் திருப்பூர் அரிமா சங்கம் இணைந்து "அறம்" எனும் பெயரில் சலுகை கட்டணத்தில்  இயங்கும் ஆம்புலன்ஸ் சேவை மையத்தினை  ஏற்படுத்தி உள்ளனர்.

இயலாதவர்களுக்கு சலுகை கட்டணம், இயன்றவர்களுக்கு நியாயமான கட்டணம் எனும் நோக்கில், இம்மையத்தில் திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் இயங்கும் குர்பாணி அறக்கட்டளை, வி.ஐ.பி ஆம்புலன்ஸ், தமுமுக மருத்துவ அணி, அருணாச்சலம் ஆம்புலன்ஸ், தவ்ஹீத் ஜமாஅத், அரிமா சங்கம், அன்னை
ஆம்புலன்ஸ், SN ஆம்புலன்ஸ், ராஜ் ஆம்புலன்ஸ், வின் ஆம்புலன்ஸ்,ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்டத்தில் இயங்கும் பல தனியார் ஆம்புலன்ஸ்
இயக்குநர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

இச்சேவை மையம் வாயிலாக கொரோனோவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பெற, உயிர் காக்கும் கருவிகளான வெண்டிலேட்டர், ஐசியூ, ஆக்சிஜன்
வசதிகள் கொண்ட அதிநவீன ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சலுகை கட்டணத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும்  இயக்கப்பட உள்ளன.

இந்த "அறம்" ஒருங்கிணைந்த ஆம்புலன்ஸ் சேவை மையத்தினை திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் திருப்பூர்  சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் அரிமா சங்க தலைவர் V.மோகன்குமார் தலைமை வகிக்க, தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில் நன்றி தெரிவித்தார்..

விழாவிற்கான ஏற்பாடுகளை மைய நிர்வாகிகள் முரளிக்குமார் சுரேஷ், விஷ்ணு, அன்வர், முகமது காஜா ஆகியோர் செய்திருந்தனர்.இச்சேவையினை பெற விரும்பும் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் 24 மணி நேரமும் இயங்கும் அறம் சேவை மையத்தின் 9159116116 எனும் எண்ணிற்கு அழைத்து சேவையை பயன்படுத்தலாம் என அமைப்பினர் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்