Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நோயாளியை வீட்டிற்கு அனுப்பும்போது ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டாம்

ஜுன் 02, 2021 12:26

சென்னை: ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை முடித்து நோயாளியை வீட்டிற்கு அனுப்பும்போது ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய வேண்டாம் என பொது சுகாதாரத்துறை டாக்டர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதையும் மீறி, சில ஆஸ்பத்திரிகளில், ‘டிஸ்சார்ஜ்’ செய்வதற்கு முன், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. எனவே, தொற்று கண்டறிய மட்டுமே பரிசோதனை செய்தால் போதுமானது. ‘டிஸ்சார்ஜ்’ செய்யும்போது, பரிசோதனை செய்ய வேண்டாம்.

மேலும் தொற்று பாதித்து 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தால், 3 நாட்களுக்கு முன்னதாக எவ்வித உடல்நல பாதிப்புகள் இல்லையென்றால் அந்த நோயாளியை வீட்டிற்கு அனுப்பலாம். வீட்டிற்கு சென்றபின் அந்த நோயாளி 7 நாட்கள் கட்டாயம் வீட்டு தனிமையில் இருப்பது அவசியம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்