Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை அமைத்து சாதனை

ஜுன் 02, 2021 12:27

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் அவர்கள் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. தூரம் சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், ‘‘சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மகாசுர்னே வரை 39.69 கி.மீ. தூரத்துக்கு தரமான கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது’’ என்று தெரிவித்து உள்ளார். சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

மேலும் மந்திரி அசோக் சவான் சாதனை படைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார். இதேபோல மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை போடும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்