Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே மாதத்தில் 1.5 கோடி இந்தியர்கள் வேலை இழந்தனர்

ஜுன் 02, 2021 01:15

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தொழில் துறைகள் முடங்கி உள்ளன. வேலையிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தொழில்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினாலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. 

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 15.33 மில்லியன் (1.5 கோடி) இந்தியர்கள் வேலையிழந்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.  ஏப்ரல் மாதத்தில் பணியாற்றியவர்கள் எண்ணிக்கை 390.79 மில்லியனாக இருந்தது. மே மாதத்தில் 375.45 மில்லியனாக குறைந்தது. இந்த வேலையிழப்பானது, ஜூலை 2020 முதல் அடைந்த லாபங்களை அழித்துவிட்டது, இது நுகர்வோர் செலவு மற்றும் பொருளாதார மீட்சியை மோசமாக பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கொரோனா இரண்டாவது அலை பல லட்சம் இந்தியர்களைப் பாதித்ததால், மாதச்சம்பளம் மற்றும் சம்பளமற்ற வேலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23 மில்லியன் குறைந்தது. மேலும் பல்வேறு மாநிலங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தன.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்த அதேசமயம், தீவிரமாக வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கை 17 மில்லியன் உயர்ந்து, மொத்த எண்ணிக்கை 50.72 மில்லியன் (5.07 கோடி) ஆனது. இந்த புள்ளி விவரம், வேலைவாய்ப்புகளின் பற்றாக்குறையை பிரதிபலிக்கிறது.

தலைப்புச்செய்திகள்