Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிபிஎஸ்இ மாணவர்களுடனான கலந்துரையாடல்: மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி

ஜுன் 04, 2021 03:10

புதுடெல்லி: சிபிஎஸ்இ மாணவர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி திடீரென பங்கேற்று மாணவ, மாணவியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கடந்த 1-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் விளக்கம் அளித்தார்.

அதன்பின், சிபிஎஸ்இ 12-ம்வகுப்பு மாணவ, மாணவி யருக்கான மதிப்பெண் மதிப்பீடு குறித்து 2 வாரத்துக்குள் மதிப்பீடு வரையறை தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் மத்திய கல்வித் துறை சார்பில் சிபிஎஸ்இமாணவ, மாணவியர், பெற்றோருடன் நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று மாணவ, மாணவியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். குறிப்பாக கரோனா காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துவிவாதித்தார். கலந்துரையாடலின் போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

குவாஹாட்டியை சேர்ந்த ஒரு மாணவர் கூறும்போது, “நான்10-ம் வகுப்பு படிக்கிறேன். பயணம் செய்வதை அதிகம் விரும்புவேன். எனது பயணத்தின்போது ஒரு புத்தகம் கிடைத்தது. அதில்பிரதமர் மோடியின் அறிவுரைகள் இடம்பெற்றிருந்தன. பொதுத் தேர்வை திருவிழா போன்று கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார். இந்த கருத்து என் மனதில் ஆழமாக பதிந்தது. இப்போது பொதுத்தேர்வு குறித்து அச்சப்படுவது கிடையாது” என்றார்.

கர்நாடகாவை சேர்ந்த நந்தன் ஹெக்டே கூறும்போது, “12-ம்வகுப்பு தேர்வு என்பது வாழ்க்கையின் இறுதி தேர்வு கிடையாது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கவலையடையவில்லை”என்றார். அதற்கு மோடி, ‘‘ஓய்வு நேரத்தில் மாணவர்கள் ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக், விரைவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கலாம்” என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்