Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெருக்களில் வசிப்போருக்கு குடும்ப அட்டை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஜுன் 04, 2021 03:12

புதுடெல்லி: னைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத்துறை கடந்த 2-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தெருக்களில் வசிப்பவர்கள், குப்பைகளை சேகரிப்பவர்கள், தெருத்தெருவாகச் சென்று பொருட்களை விற்பவர்கள், ரிக்க்ஷா இழுப்பவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற மிகவும் ஏழைகளால் குடும்ப அட்டை பெறமுடியவில்லை என்று அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மிகவும் ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

எனவே, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகவும் ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-ன் கீழ் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும். இதற்கான சிறப்பு திட்டங்களை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்