Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தளவாய் சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு

பிப்ரவரி 01, 2019 03:30

மதுரை: தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம். இவர் சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிட உரிமையாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது, ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரி வசூல் செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இவ்வாறு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. 

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற உத்தரவிடலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கி உத்தரவிடுவதற்கு நீதிபதிகளுக்கு உரிமை இல்லை என்று கூறி இருந்தார். 

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வக்கீல் கண்ணன் என்பவர் இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு ஆஜராகி ஐகோர்ட்டு உத்தரவை விமர்சித்த தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். 

அவரது முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தளவாய்சுந்தரம் மீதான புகார் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து பதிவாளரிடம் புகார் அளித்தால் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என அறிவித்தனர். 
 

தலைப்புச்செய்திகள்