Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்துக்கு இதுவரை ரெயில் மூலம் 3 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம் - தெற்கு ரெயில்வே தகவல்

ஜுன் 06, 2021 04:41

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்தநிலையில், தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை கொண்டுவந்து வினியோகம் செய்துவருகிறது. அந்தவகையில் கடந்த 14-ந்தேதி முதல் தமிழகத்துக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுவரை 43 ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று 2 ரெயில்களில் 136.73 டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. அந்தவகையில் 44-வது ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கோவைக்கும், 45-வது ரெயில் மராட்டிய மாநிலம் டோல்வியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கும் வந்தன. அவற்றில் கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட்டது.

தமிழகத்துக்கு இதுவரை 2,922.82 டன் ஆக்சிஜன், ரெயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்