Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளஸ்-2 தேர்வு ரத்து: ஜி.கே.வாசன் வரவேற்பு

ஜுன் 06, 2021 05:17

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை ரத்து செய்தது அனைவரின் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து என்று தமிழக அரசும் அறிவித்து இருப்பது பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடைய மனநிலையை பிரதிபலிக்கிறது என்று த.மா.கா. கருதுகிறது. இது வரவேற்கத்தக்கது.

பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் என்பது வருங்கால மாணவர்களின் வழிகாட்டி. அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. தற்பொழுது மாணவர்களுக்கு நல்வழிக்காட்டக் கூடிய பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் தமிழக அரசு அமைக்க இருக்கும் குழு மிக துல்லியமாக மதிப்பெண்களை மதிப்பிட்டு மாணவச் செல்வங்களின் வருங்கால கனவை நினைவாக்க உத்தரவாதம் கொடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்