Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்துணவு பொருட்களை பெற்றோர்களிடம் வழங்க உத்தரவு

ஜுன் 06, 2021 05:19

திருப்பூர்: சத்துணவு திட்ட பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த மே, ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு, உலர் உணவு பொருட்களை உடனே வினியோகிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், தலைமை ஆசிரியர்களுக்கு  அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து பள்ளிகளிலும் மே, ஜூன் மாதத்திற்கான சத்துணவு பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு போன்ற உலர் பொருட்கள், முட்டை போன்றவை வினியோகிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை.மாணவரின் அடையாள அட்டையை காண்பித்து, பெற்றோர் அல்லது பாதுகாவலர் யாரேனும் குறிப்பிட்ட காலத்தில் உரிய பைகளுடன் வந்து உணவு பொருட்களை வாங்கி செல்லலாம்.மாணவர் பெயர், பயிலும் வகுப்பு குறிப்பிடப்பட்ட டோக்கனை பெற்றோரிடம் வழங்க வேண்டும். 

ஒவ்வொரு சத்துணவு மையம் வாரியாக, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் விவரம், கையொப்பம் பெற்ற ஒப்புகை பதிவேடுகளின் நகல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு (சத்துணவு பிரிவு) அனுப்பி வைக்க வேண்டும். பயனாளிகள் அரசு அறிவுறுத்தியபடி சமூக இடைவெளி, முககவசம் அணிந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக வெளியேற வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்