Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

ஜுன் 08, 2021 05:45

சென்னை: தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. தி.மு.க.,வின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக இருக்கும்  இவர், பல்வேறு டிவி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி நதியா இன்று (ஜூன் 8) காலை சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நதியாவை பிரசன்னா, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்  பிரசன்னா - நதியா தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகி, 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி நதியாவின் பிறந்தநாளான இன்று, அதனை சிறப்பாக கொண்டாடி பேஸ்புக்கில் போட வேண்டும் என நதியா கூறியதாக தெரிகிறது.

இதற்கு கணவர் பிரசன்னா, கொரோனா காலம் என்பதால் இவ்வாண்டு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதனால் மனம் உடைந்த நதியா, காலை 10 மணியளவில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்