Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏ.கே,வி.என் மருத்துவமனையில் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்

ஜுன் 08, 2021 06:22

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் தெக்கலூர் பகுதியில் இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸ் குமரன் தங்கமாளிகை மற்றும் எஸ்.சி.எம். குழுமத்தின் ஒரு அங்கமான ஏ.கே,வி. என் மருத்துவமனையில் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது. 

80 படுக்கை வசதிகளை கொண்ட மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்துடன் இணைந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி கூடிய புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு நுரையீரல் மருத்துவம் மற்றும் சிறப்பு பொது நல மருத்துவம் ஆலோசனை மற்றும் சித்தா அலோபதி மருத்துவர்கள் மூலம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சைவம் மற்றும் அசைவ உணவு முறைப்படி முழுமையான சிகிச்சையும் கண்காணிப்பும் சிகிச்சை பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனையை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் அமைச்சர் கூறுகையில் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று குறைந்து வண்ணமே காணப்படுகிறது. பொதுமக்கள் இன்னும் ஒரு சில பேர் தேவை இல்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும். 

சிறிய அறிகுறிகள் தென்பட்டால் கூட உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனக் கூறிய அமைச்சர் மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு தமிழக அரசு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைவரும் இதை மனதில் கொண்டு ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விழாவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்,  தீ சென்னை சில்க்ஸ் குமரன் தங்கமாளிகை, ஏசியன் குழுமத்தின் நிர்வாகிகள் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்