Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

ஜுன் 08, 2021 06:23

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை துவங்கி பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய மோசடி கும்பல் குறித்து  காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விளக்கம். 

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் விஜயகார்த்திகேயன். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவைகளில் இவரின் செயல்பாடுகள் அதிகமாகவே இருக்கும். அதனால்  இயல்பாகவே இவரின் சமூக வலைத்தள கணக்கை பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் , இவரின் உண்மையான பேஸ்புக் தளத்தை போலவே, பெயர், போட்டோ க்களை வைத்து போலி கணக்கை துவங்கி சில நபர்களுக்கு மெசேஜ் மூலமாக பணம் கேட்கப்பட்டுள்ளது. 

இதனால் சந்தேகம் அடைந்த நபர்கள் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உடனடியாக போலி கணக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் , பேஸ்புக் தளத்திற்கும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் , தன்னுடைய பெயரில் வரும் இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்