Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள்: அமைச்சர் நேரு ஆய்வு

ஜுன் 08, 2021 06:25

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு  செய்தார். 

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரக்கூடிய கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பழைய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி மார்க்கெட் கட்டுமான பணி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். 

பின்னர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா  தடுப்பு பணிகள் குறித்த அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, திருப்பூரில் 51% சதவிகிதத்திலிருந்து 8% சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், முற்றிலுமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , திருப்பூரில் குடிநீர் பிரச்சினை தேவைகள், பாதாள சாக்கடை திட்டம் , ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

6 மாதத்தில் சரிசெய்யப்பட்டு பணிகள் துரிதப்படுத்தபடும்.கிராமப்பகுதிகளில் 100 குடும்பங்களுக்கு  ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.தடுப்பூசிகள் கையிருப்பு வந்த முதல் போடப்பட்டது, இந்த வாரத்திற்குள் மத்திய அரசிடம் இருந்து பெற முதல்வர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் பேட்டியளித்தார். இந்நிகழ்வின்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்அரசு அதிகாரிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்