Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிதாக 365 பேருக்கு கொரோனா : சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது

ஜுன் 09, 2021 05:25

மதுரை: தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை மிகக் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை போலவே மதுரையிலும் நாளுக்கு நாள் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 365 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 155 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இது வரை 68 ஆயிரத்து 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 1,348 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 58 ஆயிரத்து 625 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து 9 ஆயிரத்து 671 ஆக உள்ளது. மதுரையில் கடந்த மே மாதம் 28-ந்தேதி நிலவரப்படி 16 ஆயிரத்து 86 பேர் சிகிச்சையில் இருந்தனர். அதன் பின்பு தினமும் குணமடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனிடையே நேற்று மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 4 பேர் அரசு மருத்துவமனைகளிலும், ஒருவர் ெரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தவர்கள் ஆவர். 56, 55, 57 வயது பெண்கள், 64, 86, 71 வயது மூதாட்டிகள், 78 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்