Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு மாதத்திற்கு பிறகு இன்று கேரளாவில் பஸ் போக்குவரத்து தொடக்கம்

ஜுன் 09, 2021 05:49

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக கேரள மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு அமல்படுத்தியது. அங்கு பஸ் போக்குவரத்து கடந்தமாதம் 8-ந்தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அரசு முடிவு செய்தது.

வருகிற 16-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பஸ் போக்குவரத்தை தொடங்கக்கூடாது என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் சுகாதாரத்துறையின் பரிந்துரையை ஏற்க அரசு மறுத்துவிட்டது. இதனையடுத்து கேரளாவில் பஸ் போக்குவரத்து இன்று தொடங்கியது. முதல் கட்டமாக நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜூ தெரிவித் துள்ளார்.

மாநிலத்திற்குள் நீண்ட தூர பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தை தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக் கப்படவில்லை.
 

தலைப்புச்செய்திகள்