Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை உருவாகுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

ஏப்ரல் 24, 2019 05:22

சென்னை: இந்திய பெருங்கடல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27-ம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அதேபோல் 27-ம் தேதி அது இன்னும் அதிகரித்து 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்