Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஜுன் 10, 2021 05:44

பென்னகரம்:  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு ஆயிரத்து 1900 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தற்பொழுது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது.

முக்கிய நீர் வளத்தை காவிரியின் உறைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்