Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களிடம் 1.33 கோடி தடுப்பூசி கையிருப்பு

ஜுன் 10, 2021 05:49

புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 25 கோடியே 6 லட்சத்து 41 ஆயிரத்து 440 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 23 கோடியே 74 லட்சத்து 21 ஆயிரத்து 808 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களிடம் இன்னும் 1 கோடியே 33 லட்சத்து 68 ஆயிரத்து 727 டோஸ் தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாட்களில் மேலும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 750 டோஸ் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்