Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு

ஜுன் 11, 2021 05:21

சென்னை: தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் எவை? என்ற விவரங்கள் அனுப்ப வேண்டும்.

தொடக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடக்க மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி பள்ளிகள் செயல்படுமானால், அதற்கு அந்த பகுதியை சேர்ந்த வட்டாரக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்