Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வை நடத்த வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஜுன் 11, 2021 09:19

சென்னை: நீட் தேர்வின் மூலம் சமூக நீதி காக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக அரசு பின்பற்றிய வழிகளை திமுக அரசும் பின்பற்றவேண்டும் என்றும் வி.பி.துரைசாமி கூறினார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தாலும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நடத்த வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் நீதியரசர் ராஜன் தலைமையிலான குழு, மாணவர்களிடையே தேவையற்ற குழப்பத்தை எற்படுத்தும் என கூறினார்.

‘நீட் தேர்வின் மூலம் சமூக நீதி காக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு பின்பற்றிய வழிகளை திமுக அரசும் பின்பற்றவேண்டும். நீட் தேர்வை மாநில அரசு ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வை நடத்த வேண்டும்’ என்றும் வி.பி.துரைசாமி வலியுறுத்தினார்.
 

தலைப்புச்செய்திகள்