Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிராமத்தை காலி செய்த மக்கள்

ஜுன் 12, 2021 05:29

ஹாவேரி: கர்நாடக மாநிலத்தில் நகர்ப்புறங்களை போல கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்க, கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள்   கொரோனா பரிசோதனை   நடத்தி வருகின்றனர்.

ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா கிரேசுனஜி கிராம பஞ்சாயத்தில் உள்ள சிக்கஜனகி கிராமத்தில் வசிப்பவர்களுக்கு   கொரோனா பரிசோதனை   நடத்த அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் சென்றார்கள்.

ஆனால் கொரோனா பரிசோதனைக்கு ஊழியர்கள் வருவது பற்றி அறிந்த கிராம மக்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு வெளியே புறப்பட்டு சென்று விட்டனர். அந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு பக்கத்து கிராமத்திற்கும், பலர் வேலைக்கும் அதிகாலையிலேயே சென்று விட்டனர்.

கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிராமத்தை காலி செய்துவிட்டு மக்கள் வெளியேறியது தெரியவந்தது. பெலகாவி மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பெலகாவி மாவட்டம் கங்கிராலி கிராமத்தில் 140 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இங்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 பேர் உயிர் இழந்தனர்.

தலைப்புச்செய்திகள்