Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு

ஏப்ரல் 24, 2019 05:51

புதுடில்லி : பிரதமர் மோடியை திருடன் என்று அழைத்து உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் அந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாஜக தலைவர் அமித் ஷாவை கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார். 

ரபேல் வழக்கு நடைபெறும் போது அது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதற்கு விளக்கம் அளித்த ராகுல் வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, தேர்தல் பிரச்சாரத்தில் போகிற போக்கில் பேசிய ஒரு கருத்து பிரபலமாகி பிரச்சார வாசகமாகி விட்டதாக தெரிவித்தார். 

ராகுல் விளக்கத்தை ஏற்று உச்சநீதிமன்றம் நோட்டீசை திரும்பப் பெறவேண்டும் என்றும் அபிசேக் சிங்வி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் பா.ஜ., தலைவர் அமித்ஷா கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் என்று பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார், ராகுல். ஆனால், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என தம்மீது ராகுல்கூறிய விமர்சனத்திற்கு பதிலளித்த அமித் ஷா, அது ஜோடிக்கப்பட்ட அரசியல் வழக்கு என்றும், நீதிமன்றம் தமக்கு சாதகமாக தீர்ப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்