Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய 2 பேர் சிக்கினர்

ஜுன் 12, 2021 05:40

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் உடைத்து, அதில் இருந்த 62 மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து நியூஹோப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த பாபு (வயது 33), ராதாகிருஷ்ணன் (28) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. மேலும் அவற்றை வனப்பகுதியில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள மதுபாட்டில்களை அவர்கள் விற்பனை செய்து உள்ளனர். இதையடுத்து பாபு, ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து, கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்த 48 நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான பாபு, வெல்டிங் கடை ஊழியர் ஆவார். அவர் அந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் வேலை செய்தார். அப்போது கடையில் உள்ள ஒரு அறையில் மதுபாட்டில்கள் இருப்பதை கதவின் துளை வழியாக பார்த்து உள்ளார். அதன்பிறகு தனது கூட்டாளியும், ஆட்டோ டிரைவருமான ராதாகிருஷ்ணனுடன் திட்டமிட்டு கடையின் கதவை உடைத்து மதுபாட்டில்களை திருடி உள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்