Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனுமதியின்றி கொரோனா சிகிச்சை - திருப்பூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’

ஜுன் 12, 2021 06:10

திருப்பூர்: திருப்பூர் சாமுண்டிபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது.அந்த ஆஸ்பத்திரியை டாக்டர்கள் நீலாம்பாள், ஜெகதீசன் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக டாக்டர்கள் இருவரும் அந்த ஆஸ்பத்திரிக்கு வராத நிலையில் உரிய அங்கீகாரம் இல்லாமல் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதாக போலீசாருக்குபுகார் வந்தது. 

புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்,வருவாய்துறை அதிகாரிகள்,15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், ஆவணங்கள் ஆகியவற்றையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் உரிய அங்கீகாரம் இல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் ‘சீல்’வைத்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆஸ்பத்திரியை நடத்தி வந்த டாக்டர்களில் ஜெகதீசன் 2017-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு வரவில்லை என்பதும், டாக்டர் நீலாம்பாள் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது. 

அதன் பின்பு இந்த ஆஸ்பத்திரியில் கேரளாவை சேர்ந்த ஜபார் என்ற டாக்டரும், வெளிநாட்டில் மருத்துவ இறுதியாண்டு படித்து வரும் பெண் டாக்டர் ஒருவரும் உரிய அங்கீகாரம் இல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்