Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய ராணுவம் நடத்திய போர்களின் வரலாற்றை ஆவணப்படுத்த கொள்கை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

ஜுன் 13, 2021 12:41

புதுடெல்லி:இந்திய ராணுவம் நடத்திய போர்களின் வரலாற்றை ஆவணப் படுத்தும் புதிய கொள்கைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி யுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வழங்கினார். போர்களின் வரலாற்றை வகைப்படுத்துதல், ராணுவ ஆபரேஷன்களின் வரலாறு போன்றவற்றை வகைப்படுத்த இந்த கொள்கை உதவும்.

ராணுவம் நடத்திய போர்களின் வரலாற்றை தொகுத்தல், அவற்றை வகைப்படுத்துதல், வெளியிடுதல், ஆவணங்களாக தயார் செய்து அவற்றை தேசிய ஆவணக் காப்பகங்களிடம் ஒப்படைக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவம் நடத்திய போர் விவரங்கள் உள்ளிட்ட அதிகாரப் பூர்வமான தகவல்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். இவற்றில் நடந்த உண்மைகள் அனைத்தும் பதிவு செய்யப்படும்.

அதே நேரத்தில் அந்தப் பதிவுகளில் பதற்றத்துக்கு உரிய விஷயங்கள் இருந் தால் அதை ரகசியமாக வைத் திருக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு சிறப்பு அதிகாரம் நீடிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது: பாதுகாப்புத் துறை அமைச்சகத் தில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்கள் பிரிவு, அசாம் ரைபிள்ஸ், இந்திய கடலோரக் காவல் படை ஆகியவை மேற்கொண்ட போர்கள், ஆபரேஷன்கள், கடித விவரங்கள் அனைத்தும் புதிய கொள்கையின்படி ஆவணப் படுத்தப்படும்.

இந்திய ராணுவத்தின் அனைத்து வகையிலான பிரிவு மேற் கொள்ளும் ராணுவ விஷயங்கள் அனைத்தும் மிகச் சரியான முறையில் ஆவணப்படுத்தி பாது காக்கப்படும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர்கள், ஆப ரேஷன்கள் அனைத்தும் ஆவணங்களாக மாற்றப்பட்டு தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்