Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் குறித்து திக்விஜய் சிங் கருத்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்

ஜுன் 13, 2021 12:42

புதுடெல்லி:காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உரையாடிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் திக் விஜய் சிங் கூறும்போது, "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது, "பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரஸும் விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, "புல்வாமா தாக்குதல் ஒரு விபத்து என்று திக்விஜய் சிங் கூறினார். மும்பை தாக்குதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதி என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குவதை திக்விஜய் சிங் வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்" என்று தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்