Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் மருத்துவமனைகள் பெற்ற 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை 22 லட்சம்தான்

ஜுன் 13, 2021 12:50

புதுடெல்லி: கடந்த மே மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் அதிக அளவுகரோனா தடுப்பூசிகளை பெற்ற போதிலும், அதில் 17% அளவு மட்டுமே பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. கடந்த 4-ம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி மே மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 7.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றில் 1.85 கோடி டோஸ்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசிடமிருந்து, தனியார் மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றன. ஆனால் அதில் வெறும் 22 லட்சம் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அதாவது வெறும் 17% தடுப்பூசிகளை மட்டுமே தனியார்மருத்துவமனைகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப் படுகிறது. ஆனால் தனியார் மருத் துவமனைகள் இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. தனியார் மருத் துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதால் அங்குசெல்லும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் தயக் கம் காட்டுவதாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண் ணிக்கை குறைவாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனை களுக்கு கோவிஷீல்ட் டோஸ்விலை ரூ.780-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி மருந்து ரூ.1,145-க்கும்,கோவாக்சின் ரூ.1,410-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவ மனைகள் ரூ.150-ஐ சேவைக் கட்டணமாக பெறுகின்றன.
 

தலைப்புச்செய்திகள்