Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

ஜுன் 13, 2021 01:27

சென்னை:  தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள். 

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் 'அப்துல் கலாம்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. awards.tn.gov.in  என்ற இணையதளத்தில் ஜூலை 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுடன் ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்க பதக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்