Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக அரசில் சிவசேனா அடிமை போல் நடத்தப்பட்டது: சஞ்சய் ராவத்

ஜுன் 14, 2021 10:44

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி போட்டி காரணமாக சிவசேனாவும், பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது. இந்தநிலையில் சமீபத்தில் டெல்லிக்கு பயணம் செய்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இதனால் மீண்டும் இரு கட்சிகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஜல்கானில் சிவசேனா கட்சி தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:- முந்தைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசில் சிவசேனாவுக்கு இரண்டாம் நிலை அந்தஸ்து மட்டுமே வழங்கப்பட்டது. சிவசேனா அடிமைகளை போலவே நடத்தப்பட்டது. மேலும் சிவசேனா ஆதரவு மூலமாக கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியை அழித்தொழிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன.

சிவசேனா மராட்டியத்தில் அதன் முதல்-மந்திரியை கொண்டு செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பேன். சிவசேனா தொண்டர்களுக்கு இதனால் எதும் கிடைக்காவிட்டாலும், மாநிலத்தின் தலைமை தற்போது சிவசேனாவின் வசம் உள்ளது என்று பெருமையுடன் சொல்ல முடியும். மாகவிகாஸ் கூட்டணி இந்த உணர்வோடு தான் 2019-ம் ஆண்டு நவம்பரில் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்