Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சிக்கு ரூ.499 கோடி - ராஜ்நாத்சிங் ஒப்புதல்

ஜுன் 14, 2021 10:57

புதுடெல்லி: பாதுகாப்பு துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்து ரூ.499 கோடி பயன்படுத்த ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோருக்கு நிதியுதவி அளிக்க இத்தொகை பயன்படுத்தப்படும். பாதுகாப்பு துறையில் இந்தியா சுயசார்புடன் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஏற்கனவே ராணுவ தளவாடங்கள், ஆயுத இறக்குமதியை குறைத்துவிட்டது. அந்த தளவாட பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்