Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழையால் அருவிகளில் வெள்ளம்

ஏப்ரல் 24, 2019 06:39

திருநெல்வேலி: நெல்லையில் அணைகள் வறண்டு குடிநீருக்கு சிரமப்படும் நிலையில், தற்போது பெய்துவரும் மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டத் துவங்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 16 அடி மட்டுமே இருந்தது.  

அணையில் இருந்து வெறும் 53 கனஅடி மட்டுமே தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு 5 கனஅடி நீர்வரத்து உள்ளது.சேர்வலாறு அணையில் 48 அடி (மொத்த உயரம் 156 அடி). நீர் மட்டுமே உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. மாவட்டத்திலுள்ள மற்ற அணைகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது.  

மணிமுத்தாறு அணையில் தற்போது 76 அடி(உயரம் 118 அடி) நீரே உள்ளது. வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வெப்பச்சலனம்இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, தென்காசி, செங்கோட்டையில் 41 மி.மீ., மழை பெய்துள்ளது. சிவகிரியில் 40 மி.மீ., ஆய்க்குடியில் 39 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துஉள்ளது. 

மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஏப்., 25ம் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது, எனவே தென்மாவட்டங்களை வறுத்தெடுக்கும் கோடை வெயிலுக்கு மாற்றாக இந்த கோடை மழை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தலைப்புச்செய்திகள்