Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி: நியூசிலாந்து பேட்ஸ்மேன் சொல்கிறார்

ஜுன் 15, 2021 11:26

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என கைப்பற்றியது. 2-வது டெஸ்டில் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை. டாம் லாதம் தலைமையில் களம் இறங்கிய நியூசிலாந்து சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை, அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்திய நியூசிலாந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவையும் தோற்கடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா முற்றிலும் மாறுபட்ட அணி. அதை வெல்ல நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாம் லாதம் கூறுகையில் ‘‘செட் ஆகிய பந்து வீச்சாளர்களை இந்திய அணி பெற்றுள்ளது. ஏராளமான தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். உலகின் எல்லா இடங்களிலும் அவர்கள் ரன்கள் அடித்துள்ளனர். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே, அவர்களை வீழ்த்த வேண்டுமென்றால், நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

தயார்படுத்துதல் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால், எங்களுடைய கவனத்தை மாற்றி, முற்றிலும் மாறுபட்ட அணிக்காக எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியமானது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்