Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை - மதுரை மண்டலம் முதல் இடம்

ஜுன் 15, 2021 11:28

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இது மதுபிரியர்களை கவலையில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் மதுபிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சமீபத்தில் அரசு அறிவித்த தளர்வில் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்பட 11 மாவட்டங்களை தவிர ஏனைய 27 மாவட்டங்களில் நேற்று முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மீண்டும் இயங்க தொடங்கின.

35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். மதுக்கடைகளை நோக்கி ஆர்ப்பரித்து வந்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. மதுபாட்டில்களும் மளமளவென விற்று தீர்ந்தன.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் சென்னை மண்டலத்தில் ரூ.42.96 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என ரூ.164.87 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்