Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாகும் ஆக்சிஜன் படுக்கைகள்

ஜுன் 16, 2021 01:14

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா ஆக்சிஜன் படுக்கைகள் அதிகம் தேவைப்பட்டது. நோயாளிகள் பலர் ஆக்சிஜன் படுக்கை கிடைப்பதற்காக மருத்துவமனை வாசலில் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 800க்கு கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை தினமும் 1,500 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை காலியாக தொடங்கியுள்ளது. 6 அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 687 ஆக்சிஜன் படுக்கைகளில் 464 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 223 படுக்கை காலியாக உள்ளது.

மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 473 ஆக்சிஜன் படுக்கை உள்ளது. இதில 295 நிரம்பியுள்ளது. 178 படுக்கைகள் காலியாக உள்ளது. 3 தற்காலிக சிகிச்சை மையத்தில் 327 ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 275 படுக்கை காலியாகி விட்டது.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் கொடுக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திகொள்ள அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் ஆக்சிஜன் படுக்கை காலியாகி வருகிறது என்றனர்.

தலைப்புச்செய்திகள்