Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்மேற்கு பருவமழை தொடக்கத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் நிரம்பி வரும் அணைகள்

ஜுன் 17, 2021 12:14

திண்டுக்கல்:  திண்டுக்கல்மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கத்திலேயே நீர்வரத்து அதிகரித்து வரதமாநதி அணை, மருதாநதி அணை நிரம்பியுள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழையும் உரிய காலத்தில் தொடங்கியதால் அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.

குறிப்பாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரதமாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை (66.47 அடி) எட்டியது. இதன் உபரி நீர் கண்மாய், குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங் களுக்கு முன்பு கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி அடிவாரத்தில் உள்ள மருதாநதி நிரம்பி முழு கொள்ளளவை (72 அடி) எட்டியுள்ளது. இதன் உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதேபோல் மற்ற அணை களுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணை 48.03 அடி வரையிலும் (மொத்தம் 65 அடி), பரப்பலாறு அணை 74.55 அடி வரையிலும் (மொத்தம் 90 அடி), குதிரையாறு அணை 56.45 அடி வரையிலும் (மொத்தம் 80 அடி) நிரம்பியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் இந்த அணைகள் அனைத்தும் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடக்கத்திலேயே அணைகள் நிரம்பும் அளவுக்கு நீர்வ ரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச் சியுடன் சாகுபடி பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை நீடிக்கிறது. இதனால் தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலைப் பகுதியில் பெய்த மழையால் மூலவைகையில் நீர் வரத்து அதிகரித் துள்ளது.

இதனால் வைகை அணைக்கு விநாடிக்கு 563 கன அடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 66.5 அடியை எட்டி உள்ளது. 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் 110 மிமீ. மழையும், தேக்கடியில் 39 மிமீ. மழையும் பதிவானது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 2 ஆயிரத்து 808 கன அடி நீர் வருவதால், நீர்மட்டம் 132அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து ஆயிரத்து 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்