Sunday, 6th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பிறகு தாஜ்மகால் உட்பட நினைவிடங்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

ஜுன் 17, 2021 12:23

புதுடெல்லி:நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவிலின் 2-வது அலைகாரணமாக, பாரம்பரிய நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் தீவிரம் அடங்கியுள்ளதால், அந்த நினைவிடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு நேற்று முதல் திறக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த 2 மாதத்துக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள 3,693 நினைவிடங்கள், 50 அருங்காட்சியகங்களை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வையிடலாம்.

அதேநேரத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறைஎச்சரித்துள்ளது. மேலும், நினைவிடங்கள், அருங்காட்சியகங்களை பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

நினைவிடங்களை பார்வையிடுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளை பொது மக்கள், சுற்றுலா பயணிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தொல்லியல் துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் பிரபு என் சிங் அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்