Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்போர்ட்டனா அகாடமி நடத்தும் ஆன்லைன் யோகா போட்டி

ஜுன் 17, 2021 08:22

சென்னை: கொரோனா கால கட்டத்தில் அனைத்து பள்ளி குழந்தைகளும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்கள் மனதளவில் புத்துணர்ச்சிப் பெற வீட்டிலிருந்தே பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். 

அந்த வகையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக (Sportena Academy) ஸ்போர்ட்டனா அகாடமி ஆன்லைன் யோகா போட்டியை முன்னெடுத்து வருகிறது.

இப்போட்டியில் எல்.கே.ஜி முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவ மற்றும் மாணவியர்கள் பங்கு பெறலாம். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மற்றும் மாணவியர்களுக்கு கேடயம்+பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 

போட்டியில் பங்கு பெறும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் 21.06.2021. இதுகுறித்த மேலும் விபரங்களை 87783 94729 / 93808 69045 என்ற எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 
 

தலைப்புச்செய்திகள்